உண்மையை மறைக்கும் ஊடகங்கள் - பழிபோடும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
Easter Attack
SriLanka
Cardinal Malcolm Ranjith
Media Covering
By Chanakyan
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையை நாட்டின் சில ஊடகங்கள் மக்களுக்கு வெளியிடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Malcolm Ranjith) குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வார இறுதியில் கருத்து வெளியிடும் போதே பேராயர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மையை ஊடகங்கள் நாட்டுக்கு வெளியிட வேண்டும்.
சில ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் தமது ஊடகங்களை கையாண்டு வருகின்றன.
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை வெளிவரும் நாளில் இந்த ஊடகங்கள் அழிந்து போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
