வவுனியா பல்கலைக்கழக ஊடகக் கற்கை மாணவர்கள் ஊடக நிறுவனங்களுக்கு கள விஜயம்
வவுனியா பல்கலைக்கழகத்தில் ஊடகக் கல்வியறிவு மற்றும் இதழியல் உயர்தர சான்றிதழ் கற்கைநெறியினை பயில்கின்ற மாணவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜ. பி. சி தமிழின் யாழ் கலையகம் மற்றும் டான் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
செயல்முறை ரீதியான விளக்கங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களுக்கான விஜயத்தை அவர்கள் இன்று(29) மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜ. பி. சி தமிழின் யாழ் கலையகம் மற்றும் டான் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
அங்கு தொலைக்காட்சி அலைவரிசையில் நிகழ்வுகள், செய்திகள் வெளியிடுவது தொடர்பான அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்கின்ற விடயங்கள் தொடர்பாக பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து யாழ். ஊடக அமையத்தினருடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இவர்கள் இன்றும் (29) நாளையும் (30) பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கை வளாகம் ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இக்கள விஜயத்தின் போது குறித்த கற்கை நெறியின் கல்விசார் இணைப்பாளர் சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி மதிவதனி சசிதரன் மற்றும் குறித்த பயிற்சி நெறியின் வளவாளர்களான கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார், அமிர்தநாயகம் நிக்ஸன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்