ஆறுமாதங்களில் வெளிநாடு பறந்த மருத்துவ நிபுணர்கள் -நோயாளர்கள் கடும் சிக்கலில்
கடந்த ஆறு மாதங்களில் ஹம்பாந்தோட்டை மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளில் இருந்து 11 மருத்துவ நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் இருந்து 10 மருத்துவ நிபுணர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து மயக்க மருந்து நிபுணர் ஒருவரும் இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சத்திர சிகிச்சைக்கு செல்லும் நோயாளர்கள்

வெளிநாடு சென்ற மயக்க மருந்து நிபுணரின் வெற்றிடத்தை நிரப்ப சுகாதார அமைச்சு தவறியுள்ளது. இதனால் சத்திர சிகிச்சைக்கு செல்லும் நோயாளர்கள் மிகவும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீர்வு காணாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கை

இதற்கு தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.