மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய வேலைத்திட்டம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மருந்துப் பொருட்களின் பெறுகை செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கமைய மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு

இலங்கையின் மருத்துவத்துறை பற்றிய அவதானம் தற்காலத்தில் மேம்பட்டுக் காணப்படுவதாகவும் உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் இலங்கையின் வைத்தியத்துறைக்கான அர்பணிப்புக்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் காணப்படும் மருத்துவத்துறை தொடர்பிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அந்த தீர்வுகள் இலவச மருத்துவத்துறையின் எதிர்காலத்தில் எவவகையில் தாக்கம் செலுத்தும் என்பது பற்றியும் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், கொவிட் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக முழு உலகத்தினதும் சுகாதாரச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதெனவும், கொவிட் தடுப்பூசிகளுக்காக இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 60 மில்லியன்களை செலுத்தியுள்ளது.
கொவிட் தொற்று

இந்தியாவிலும் கொவிட் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்ததன் விளைவாக மருந்து தயாரிப்பு நிறுவனம் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதனால் “சீரம்” நிறுவனம் இந்தியாவிலிருந்தே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், செலுத்திய பணத்திற்கு ஊசிகளும் கிடைக்கவில்லை. பணத்தையும் மீளப்பெறமுடியாமல் போய்விட்டது.
அன்று முதல் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே முன்னோக்கிச் செல்கிறது.
பொதுவாக மருத்துவ விநியோகத்துறைக்கு ஒரு வருடத்திற்கு அவசியமான பொருட்கள் முன்கூட்டியே கோரப்படும் என்பதோடு, ஒரு வருடத்திற்கு அவசியமான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் இயலுமையும் காணப்பட்டது.
அக்காலத்தில் நிதி நெருக்கடியும் காணப்படவில்லை. கொவிட் பரவல் காரணமாக விமான மற்றும் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகள் தடைப்பட்டமையினால் நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பொருட்கள் பரிமாற்றச் செயற்பாடுகளும் முடங்கின.
அந்த நேரத்தில் கொவிட் கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினால் மருந்து பொருட்களை களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் மீது அவதானம் செலுத்த முடியாமல் போயிருந்தது. " என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்