கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்பாடு : அகில இலங்கை தாதியர் சங்கம்
Colombo
Sri Lanka
By Beulah
கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்துகள் மற்றும் இரசாயன தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறான சூழ்நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள்
மேலும், இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அமைச்சர் உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்