மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்
Colombo
Mahinda Rajapaksa
India
By Jaso
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னிக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது. அங்கு, அவர்கள் இருதரப்பு உறவுகள் குறித்து இணக்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
சந்திப்புகளின் மூலம் இருதரப்பு நட்பு மேலும் வலுப்பெறுகிறது
இத்தகைய சந்திப்புகளின் மூலம் இருதரப்பு நட்பு மேலும் வலுப்பெறுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்று, கலாசார மற்றும் மத ரீதியான பிணைப்புகளின் அடிப்படையில் அமைந்த இலங்கை-இந்திய நட்பு, பிற்காலத்தில் நமது இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்கும் செழிப்புக்கும் பங்களிக்கும் ஒரு பரந்த ஒத்துழைப்பாக வளர்ந்துள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி