அமெரிக்க செனட்டர் ரணிலுடன் சந்திப்பு
அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) நேற்று (30) கண்டி அதிபர் மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா உடனிருக்கும்
The U.S. continues to work together with Sri Lanka on its journey to a prosperous country for all. Today Senator Van Hollen and I met with President @RW_UNP to discuss the challenges and opportunities for partnership that promote inclusive governance and protect human rights.… pic.twitter.com/mWKbE1ef88
— Ambassador Julie Chung (@USAmbSL) August 30, 2023
இச்சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், “சுபீட்சமான நாட்டை உருவாக்கும் பயணத்தில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக” கூறியுள்ளார்.
படங்கள்

