திசைகாட்டி உறுப்பினர் அதிரடி கைது: வெளியான பின்னணி
இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் முறைப்பாடளித்தவரும் அதே கட்சியில் ஹல்துமுல்ல பிரதேச சபையில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மிளகு வியாபாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை தொடர்பாக முறைப்பாட்டாளருக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே சிறிது காலமாக தகராறு இருந்து வந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்படி, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, பணம் கிடைக்காதது தொடர்பாக பண்டாரவேல பிரதேச நிதி குற்றப்பிரிவில் சம்பந்தப்பட்ட முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபரான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நேற்றையதினம்(20) கைது செய்யப்பட்டு பண்டாரவேல நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
