லெபனானில் வீழ்த்தப்பட்ட 15 தளபதிகள் ! இஸ்ரேல் வெளியிட்ட காணொளி
லெபனானில் சண்டை தொடங்கியதிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
குறித்த குழுவின் பீரங்கிப் பிரிவுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
இதன்படி இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) கூற்றுப்படி, “அந்த 200 ஏவுகணை செலுத்திகளில் சுமார் 1,300 தனித்தனி ஏவு குழல்கள் அடங்கியிருந்தன.
יותר מ-200 משגרים הושמדו ומאות פעילי אריטלריה חוסלו מתחילת המערכה מול ארגון הטרור חיזבאללה
— צבא ההגנה לישראל (@idfonline) April 10, 2026
כחלק מהמאמץ לסיכול ושיבוש יכולות הירי של ארגון הטרור חיזבאללה, צה"ל תקף והשמיד עד כה יותר מ-200 משגרי רקטות ובהם כ-1,300 קני שיגור.
השבוע חוסל עלי כאמל עבר אלחסן, אחראי הארטילריה ביחידת… pic.twitter.com/Ywuc1yKK3X
கொல்லப்பட்ட 15 பேர் தளபதிகள்
ஹிஸ்புல்லாவின் 250 பீரங்கிப் படை வீரர்களில் 15 பேர் தளபதிகள் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறுகிறது.

மேலும், டோவ் மலைக்கும் பின்ட் ஜ்பெயில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிக்குப் பொறுப்பான, அந்த குழுவின் நஸ்ர் பிராந்தியப் பிரிவின் பீரங்கிப் படைத் தலைவரை இந்த வாரம் எமது படை கொலை செய்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |