மொட்டு, ரணில் தரப்புக்கு பலத்த அடி..! ஜே.வி.பியுடன் இணையும் முக்கியஸ்தர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தற்போது ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் இணைந்துவருவதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களில் தனது கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்குமென அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசியக் கட்சியினர் கடந்த 74 வருடங்களாக பல வேடங்களில் வந்து இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தனர்.
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களே முக்கிய காரணம். இதனை யாரும் சிறிய விடயமாக கருதக் கூடாது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச போன்ற அரசியல்வாதிகள் மாத்திரமின்றி பல வர்த்தகர்களும் நாட்டில் நடைபெறும் லஞ்ச ஊழல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு பின் இருக்கின்றனர்.
தேர்தலை ஒத்திவைக்க சதி திட்டங்கள்
எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனாலும், ரணில் விக்ரமசிங்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க பல சதி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மாத்திரம் தேசிய மக்கள் சக்தி முன் நிற்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் உள்ளோம்” - என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
