ரணிலை சந்தித்த கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(6) காலை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் சில விடயங்கள் தொடர்பில் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் பிரச்சினை
இந்நிலையில் குறித்த விடயங்களை கிழக்கு மாகாண ஆளுநருக்கும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான சந்திப்புக்கள் ஊடாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசி தீர்க்குமாறும் அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான போதுமான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கும் விடயங்கள் குறித்து மட்டும் உரிய அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாக அதிபர் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். அதாஉல்லா, பைசால் காஸிம், செய்யத் அலிஸாஹிர் மௌலானா, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |