மே 18 இல் யாரை நினைவு கூர்ந்தீர்கள்? வீடு தேடிச்சென்ற கட்டளை

By Vanan Feb 20, 2022 10:12 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளான மே 18 ஆம் திகதி, வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்ற விபரங்களை வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதியிடம் சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் ஆனந்தவர்மன் எனப்படும் செல்வநாயகம் அரவிந்தன் என்ற முன்னாள் அரசியல் கைதிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கட்டளையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டளையில், கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இனப்படுகொலையை நினைவுகூரும் தினத்தன்று, யுத்தத்தில் மரணித்த தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதாக வாக்குமூலம் வழங்கியிருந்தீர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வாக்கு மூலத்தின் போது யுத்தத்தில் மரணித்த குடும்பத்தினரதும், உறவினர்களினதும் விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கையளிப்பேன் எனவும் கூறியிருந்தீர்கள் எனவும் அந்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்பதாக வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மரணித்தவர்களின் முழு விபரங்களையும் கையளிக்குமாறு தகவல் தருகின்றோம் என குறித்த கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதி குறித்த முன்னாள் அரசியல் கைதி தனது வீட்டில் இறந்தவர்கள் நினைவாக நீதிமன்ற கட்டளைகளை மீறாத வகையில் அஞ்சலி செலுத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் இவ்வாறான நடவடிக்கை, தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதுடன், அவர்களின் நினைவேந்தலுக்கான உரிமையை மறுக்கும் செயற்பாடு என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023