மீன்பிடிக்கசென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு - வவுனியாவில் சோகம்
sri lanka
death
people
By Shalini
வவுனியா நெடுங்கேணி அரியாமடுப்பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிக்கசென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை அரியாமடுப் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
இதன்போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயதாஸ் வயது 44 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்