யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை - சிக்கிய CCTV காணொளி
புதிய இணைப்பு
யாழ். (Jaffna) வடமராட்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி சிசிரி காமராவில் அப்பகுதியில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற கொலை குற்றவாளி இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீ செட் ஒரு பகுதி இளைஞரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி சிசிரீ காமரவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம்
பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத் திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியமுடியவில்லை , நெல்லியடி குற்றத்தடுப்புகாவல்துறையினர், யாழ் விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19.11.2025) இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 20 மணி நேரம் முன்