21 பேரணியில் களமிறங்கும் மகிந்த.! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் 21 ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு ஆசீர்வாதம் பெற வந்தபோது, முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத நடவடிக்கை
நிகழ்வில் பேசிய முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த பேரணிக்கு நிச்சயமாக பெருந்தொகையான மக்கள் அணிதிரளுவார்கள்கள் என்றும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மகிந்த ராஜபக்ச 21 பேரணியில் கலந்து கொள்ளமாட்டார் என நாமல் ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில், மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 6 மணி நேரம் முன்