பிரச்சினை முடிந்து விட்டது எதற்காக எழுந்து ஆடுகிறீர்கள்: எதிரணிக்கு அநுர பதிலடி!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தற்போது நிறைவடைந்து விட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18.11.2025) நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி, திருகோணமலையில் நேற்று (17.11.2025) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை நிறைவடைந்த பின்னரும் ஏன் எழுந்து ஆடுகிறீர்கள் என ஜனாதிபதி இதன்போது எதிரணியினரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி
எங்களுடைய நாட்டில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இனவாதம் தூண்டப்பட்டு வந்தது.

கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஊழல், பொருளாதார வீழ்ச்சி போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், எங்களுடைய அரசாங்கம் மீது இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை.
எனவே, இவ்வாறு இனவாத விடயங்களால் எங்களுடைய அரசாங்கத்தை தோற்கடிப்பதே எதிரணியின் நோக்கம். அனுமனைப் போல் இனவாதத்தை வைத்து தீ மூட்ட முயற்சிக்கின்றனர்.
அறிக்கை கோரல்
திருகோணமலை விவகாரம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இதில் மறைமுக விடயம் ஒன்று உள்ளது.
புதிய கட்டுமானங்களை நிறுவ வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சிக்கல் தற்போது நிறைவடைந்து விட்டது. தற்போது ஏன் ஆடுகிறீர்கள்?
எங்களுடைய அரசாங்கம் ஒருபோதும் இனவாதத்துக்கும் இடமளிக்காது. பழைய இனவாத நாடகங்கள் தற்போது அரங்கேற வழிவிட மாட்டோம். நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் இனவாதம் இருக்காது.” என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 5 மணி நேரம் முன்