கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஹொரணை - மல்வானேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
மேலும், ஹொரணை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்