யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மரணம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு பகுதியில் இரத்தவாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த 15ஆம் திகதி இரவு 10 மணியளவில் இரத்த வாந்தி எடுத்துள்ளார்.
மரண விசாரணை
பின்னர் 16ஆம் திகதி நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 17ஆம் திகதி அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பணம் (Jaffna) - சுன்னாகம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 14ஆம் திகதி உணவருந்தி விட்டு இருந்த வேளை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
அவசர நோயாளர் காவு வண்டி
பின்னர் அவசர நோயாளர் காவு வண்டியை அழைத்த வேளை அவ்விடத்திற்கு வந்த அவசர நோயாளர் காவு வண்டியில் இருந்த பணியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
