வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை! செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

Jaffna Sri Lanka
By Erimalai Dec 13, 2025 02:14 PM GMT
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

''வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட போதும் எங்களுக்கு எந்த விதமான கொடுப்பனவுகளும் தரப்படவில்லை.

நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி கொடூரமான முறையில் கைது

நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி கொடூரமான முறையில் கைது

வெள்ளத்தால் நிரம்பிய வீடுகள்

கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு வழியின்றி ஊடகத்தை அழைத்துள்ளோம்.  டிட்வா புயல் இலங்கையை தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமது வீடுகளும் வெள்ளத்தால் நிரம்பி இருந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை! செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் | Mental Anguish Of The Flood Affected People

உறவினர் வீட்டில் ஒரு சில குடும்பம் தங்கி இருந்தோம். எங்களுடைய வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்த போதும் எமது வீட்டை கிராம அலுவலர் இதுவரை வந்து பார்க்கவில்லை.

சேத விபரங்களை அறிக்கையிடவில்லை. நிரந்தர வீடு என்று கூறிச் சென்றார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அடிக்கடி கூறி வருகிறார்.

ஆனால் உண்மையில் பாதிப்படைந்த மக்களை அந்த நிவாரணம் போய் சேருவதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

பாதிக்கப்படாத மக்களுக்கு எமது பகுதியில் வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை யாரும் கவனிக்கவில்லை.

கிராம அலுவலர் கூட இதுவரை பார்க்கவில்லை.காலில் காயமுற்று நடக்க முடியாதவர்களாக துன்பப்படுகின்றோம்.

அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தை வழங்க ஏன் அதிகாரிகள் தயங்குகின்றார்கள் எந்த வீடாக இருந்தாலும் சரி புயலால் சேதமடைந்த வீட்டை வந்து கிராம அலுவலர் பார்வையிட வேண்டுமல்லவா?

செட்டிக்குளம் பிரதேச சபையில் அமளி துமளி! வெளியாகிய பரபரப்பு காணொளி!

செட்டிக்குளம் பிரதேச சபையில் அமளி துமளி! வெளியாகிய பரபரப்பு காணொளி!

அஸ்வெசும திட்டங்கள் 

அதனையும் வந்து பார்வையிடவில்லை அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் பலர் பயனடைந்து வருகிறார்கள் ஆனால் உண்மையில் வறுமைக்கோட்டில் கஷ்டப்படும் எங்களுக்கு எந்த விதமான திட்டங்களும் தரப்படவில்லை.

வெள்ள நிவாரணம் கூட கிடைக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அயலவர்களின் வீட்டில் குடியிருக்கும் எங்களை யாரும் வந்து நலம் விசாரிப்பதாக இல்லை.

ஒரு சிலரின் தூண்டுதலில் நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றோம். ஒரு சில கிராமத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு இருப்பது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் போய் சேர்ந்ததா என்பதை ஆராய ஜனாதிபதி அவர்கள் சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காலா காலம் நாம் வீடு இன்றி தற்காலிக வீட்டில் துன்பப்பட்டு வருகிறோம் அரசாங்கம் கொடுக்கும் வெள்ள நிவாரணத்தை கூட அதிகாரிகள் கொடுப்பதற்கு மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஜனாதிபதி இது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி பதிக்கப்பட்ட எங்களுக்கு கொடுப்பவை பெற்றுத் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்களின் வேண்டுதலின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வத்திராயன் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி