சபாநாயகருக்கு சீனாவிலிருந்து வந்த செய்தி (படம்)
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் லீ சன்ஷூவின்(Lee Sunshu) புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்(See Senhong) இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை(Mahinda Yapa Abeywardena) சந்தித்து இந்த வாழ்த்துச் செய்தியை கையளித்தார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை இவ்வருடத்தில் பலப்படுத்துவதற்கு உறுதியுடன் இருப்பதாக சீனத் தூதுவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்தமைக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் லீ சன்ஷூ அவர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் இங்கு நன்றி பாராட்டினார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.
முன்னதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு சீன அரச தலைவர் புத்தாண்டு வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.