யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.04.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
வடக்கு, கிழக்கு. வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |