கடற்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (24) முற்பகல் 11 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பு
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடுவதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்