பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து: MI5 உளவு அமைப்பு அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ரஷ்யா, ஈரான் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகியவற்றால் முன்னோடியில்லாத வகையில் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான MI5 இன் பணிப்பாளர் நாயகம் சேர் கென் மெக்கல்லம் (Sir Ken McCallum) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
லண்டனில் உள்ள தேம்ஸ் ஹவுஸ் (Thames House) தலைமையகத்தில் தனது வருடாந்த அச்சுறுத்தல் தொடர்பான உரையை ஆற்றுகையிலேயே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
இந்தநிலையில் செயற்கை நுண்ணறிவால் எழும் அபாயங்களைக் கண்காணிக்க MI5 புதிதாக AI அச்சுறுத்தல் மதிப்பீட்டு மையத்தை (AI Threat Assessment Centre - AITAC) அமைத்துள்ளதாக மெக்கல்லம் அறிவித்துள்ளார்.

அத்தோடு பயங்கரவாதிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய உயிரி-ஆயுதங்களை (Biological weapons) உருவாக்கவும் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் துல்லியமாக நடத்தவும் முற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |