நாம் இறப்பதற்குள் நீதியைப் பெற்றுத்தாருங்கள் - மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை
letter
michelle bachelet
omp
commissioner human rights commission
By Vanan
ஓ.எம்.பி ஐ தவிர்த்து சர்வதேச விசாரணையுடன் கூடிய நீதிப் பொறிமுறை ஒன்றை பரிந்துரை செய்து, தாம் இறப்பதற்குள் நீதியைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் வடக்கு கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர்.
“உரிய நீதிக்குப் பதிலாக ஓ.எம்.பி ஐ பாதிக்கப்பட்டவர்களிடம் திணித்தல்” எனும் தலைப்பில் மிச்சல் பெச்சலட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள விடயங்கள் வருமாறு,



