மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் போர் நிலை
இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு (13) தாக்குதலை மேற்கொண்ட நிலையில், எதிர்வரும் நாட்களில் இவ்வாறான மேலும் பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போர் நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் விலை
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிக்கப்படுவதில் தாமதங்கள் ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட மேலும் சில இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |