பிரித்தானிய வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு பேரிடி
சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாகக் கூறி வரும் பிரித்தானியா (United Kingdom) சட்டப்படி வருபவர்கள் மீதும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் உள்ளது.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் புதிய விதிகளை பிரித்தானிய அரசு நடைமுறைக்கு கொண்டுவருகிறது.
பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாத வகையில் சட்டம் ஒன்று நேற்று அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
வெள்ளை அறிக்கையை கோடிட்டுக் காட்டப்பட்ட பிரித்தானியாவிற்கான குடியேற்ற அளவைக் குறைப்பதற்கான பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிகள் அமைகின்றன.
நீங்கள் இந்த நாட்டிற்கு வந்தால் எங்கள் மொழியைக் கற்றுக் கொண்டு உங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்கு வந்து பங்களிப்பவர்களை இந்த நாடு எப்போதும் வரவேற்றுள்ளது, ஆனால் புலம்பெயர்ந்தோர் நமது மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இங்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Link - https://www.gov.uk/government/news/migrants-will-be-required-to-pass-a-level-standard-of-english
A மட்டத்தில் ஆங்கிலப்புலமை
அவ்வகையில், இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும்.
சில குறிப்பிட்ட சட்டப்படியான வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர் பேசுதல், கவனித்தல், வாசித்தல் மற்றும் எழுதுதலில், A மட்டத்தில் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர்ந்தோர் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளாமல் பிரித்தானியா வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்நாட்டின் உள்துறை அமைச்சராக ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
