இராணுவ ஆட்சியாளராகவும் வருவேன் - கோட்டாபய வெளிப்படை
sri lanka
Gotabaya Rajapaksa
military rule
By Vanan
தன்னால் இராணுவ ஆட்சியாளராகவும் செயற்பட முடியும் என்கிறார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa).
தென்னிலங்கையின் வீரகெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மந்தாதுவ அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில், அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''அரச தலைவர் தேர்தலின் போது 69 இலட்சம் மக்கள் எனது முகத்திற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. என்னுடைய கொள்கைத் திட்டங்களுக்கு மதிப்பளித்தே அவர்கள் வாக்களித்தனர்.
நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்றே பலர் எதிர்பார்த்தனர், என்னால் அப்படிச் செயற்பட முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட தான் விரும்பவில்லை'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.