உக்ரைனில் வீதியில் சென்று கொண்டிருந்த காரின் மீது ஏறிய இராணுவ தாங்கி ( வீடியோ)
உக்ரைன் தலைநகர் கிவ்-வில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது ராணுவ தாங்கி ஒன்று ஏறிய வீடியோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இராணுவ தாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷ்யாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் உக்ரைன் நாடாளுமன்றிலிருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த இராணுவ தாங்கி வேகமாக மோதியது. இதில், ராணுவ தாங்கிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக்கொண்டார்.
அதன்பின்னர், சில வினாடிகள் கழித்து இராணுவ தாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இராணுவ தாங்கி ஏறியதில் கார் உருக்குலைந்தபோதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இராணுவ தாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Sky News has verified videos showing a civilian car run over by a military vehicle in Kyiv, about 10km north of the Ukrainian parliament building.
— Sky News (@SkyNews) February 25, 2022
Watch the video in full ?pic.twitter.com/hdIQR1InFm
