பால் மா விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!
Milk Powder Price in Sri Lanka
Sri Lanka Food Crisis
Milk
By Dharu
எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பால் மாவின் விலையும் குறைக்கப்பட்டதுடன், அதன்படி 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.
பால் மாவின் விலை
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 1120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு கிலோ பால் மாவின் விலை 3100 ரூபாவிலிருந்து 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி