இம்மாத இறுதியில் பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு?
sri lanka
milk powder
shortage
Ashoka Bandara
By Vanan
இம்மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் பால்மாவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார (Ashoka Bandara) தெரிவித்தார்.
இதனால், தற்போது சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டன.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 1,345 ரூபாவிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி