முக்கிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானம்
milk
gas
cement
remove
control price
By Vanan
கோதுமை மா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இக்கலந்துரையாடலில், நியாயமற்ற விலை அதிகரிப்புக்கு இடமளிக்க வேண்டாம் என அரச தலைவர் சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.