”மில்லர்” திரைப்படம் ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனைக்கான முயற்சி!

Cinema Lead IBC Tamil Jaffna Cinema News
By Kanooshiya Oct 27, 2025 08:11 AM GMT
Report

ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில் உருவாகவுள்ள 'மில்லர்'திரைப்படத்தின் ஆரம்ப விழா நேற்று (26.10.2025) யாழில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது.

ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) தயாரிப்பில் ராஜ் சிவராஜ் (Raj Sivaraj ) பூவன் மதீசன் (Poovan Matheesan) ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மில்லர் திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான திரைப்பட பூஜை, ஆசி உரைகளைத் தொடர்ந்து, நடராஜர் நர்த்தனாலய மாணவிகளது அற்புதமான நடன ஆற்றுகையோடு ஆரம்பமான குறித்த நிகழ்வுகள் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததன.

ஈழத்திற்கான பிரம்மாண்ட படைப்பு :மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

ஈழத்திற்கான பிரம்மாண்ட படைப்பு :மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

இந்திய சினிமா பிரபலங்கள்

இந்திய சினிமா பிரபலங்களை அழைத்தமை தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான விமர்சனங்கள் வந்தபோதும் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் உத்திக்கு அவை தவிர்க்கப்பட முடியாதது என்பது விமர்சகர்களுக்கும் புரிந்த ஒன்று தான்.

”மில்லர்” திரைப்படம் ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனைக்கான முயற்சி! | Miller Movie Poojai At Jaffna

இந்திய கலைஞர்களை அழைத்து வருடத்துக்கு நான்கு நிகழ்ச்சிகளை செய்யும் புலம்பெயர் தேசத்தில் இருந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான் வியப்பைத் தந்திருந்தன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்களது ”எங்களிடம் கதை இருக்கிறது, கதைக்குரிய களம் இருக்கிறது, அதை வெளிப்படுத்தும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள்” என்ற காத்திரமான உரையை அடியொற்றிய விருந்தினர்களது பேச்சுக்கள் ஈழ சினிமா மீதான நம்பிக்கையை உறுதி செய்திருந்தன.

மில்லர் திரைப்படத்தின் இயங்குனர் ராஜ் சிவராஜ், இந்திய பிரபலங்களைப் பார்த்து ”எங்கள் சினிமாவில் நடிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் உங்கள் கலைஞர்கள் இங்கு வரும் நிலையை வெகு சீக்கிரத்தில் உருவாக்குவோம்” என ஆற்றிய உரை ஈழ சினிமா மீதும் எம் கலைஞர்கள் மீதும் அவர் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையை பிரதிபலித்திருந்தது.

வழமை போலவே, அழைத்தவர்களைப் புகழ்ந்து பேசும் இந்திய கலைஞர்களது இயல்புக்கு இங்கும் குறையிருக்கவில்லை.

கவிப்பேரரசு ரைவமுத்து மீது எத்தனை விமர்சனங்கள் மேலெழுந்த போதும் அவரது தமிழ்ப் புலமையும் அதனை கையாளும் லாவகமும் விமர்சனங்களை புறமொதுக்கி அவரது ஆழமான பேச்சில் லயிக்க வைத்தமையை ஹொட்டல் வலம்புரி மண்டபம் எடுத்தியம்பியது.

மில்லர் படத்தின் கதாநாயகன் பாஸ்கரன் றீகனுக்கு இரண்டு அறிவுரைகள் என நல்ல பல உதாரணங்களுடன் கவிப்பேரரசு கூறியவை றீகனுக்கு மட்டுமல்ல றீகனைப் போன்ற தற்கால இளைஞர்களுக்கான மிக முக்கியமான அறிவுரையாக அமைந்திருந்தது.

மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வு நேரலை!

மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வு நேரலை!

ஈழ சினிமா

இனி படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகும் பாஸ்கரன் றீகன், படத்தின் கதை றீகனுக்கு பொருந்தியிருக்கிறதா இல்லை றீகனுக்கு பொருத்தமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை மில்லர் வெளியீட்டின் பின்னர் தான் கூற முடியும்.

”மில்லர்” திரைப்படம் ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனைக்கான முயற்சி! | Miller Movie Poojai At Jaffna

ஆனால் பாஸ்கரன் றீகன் கதாநாயகனுக்குரிய தோற்றத்தோடு மட்டுமல்லாது அதற்கு தன்னைத் தயார்ப்படுத்தி வைத்திருப்பதும் அவரது உரையின் மூலம் வெளிப்பட்டிருந்தது.

அதில் ஹைலட் ”இதுவரை பாஸ்கரனின் மகன் றீகன் என்று அழைக்கப்பட்ட நிலையை றீகனின் அப்பா பாஸ்கரன் என்று மாற்றும் வகையில் இந்தப் படத்தில் என் பங்கு இருக்கும்” என்று கூறியமை நம் இளையவர்களுக்கான முன்மாதிரியான உரையாகவும் அவர் மீதான நம்பிக்கையை தருவதாகவும் அமைந்திருந்தது.

மில்லர் படத்தின் நேற்றைய தொடக்கமும் அது கொடுத்திருக்கும் தாக்கமும் ராஜ் சிவராஜ், மதீசன் மற்றும் படக் குழுவினருக்கு பெரும் பொறுப்பைக் கையளித்திருக்கிறது.

ஈழசினிமாவை கொண்டாடுவதற்கு நம் ரசிகர்களும் தயாராக இருக்கிறார்கள், ஏற்கனவே பல வித்தியாசமான நல்ல படைப்புக்களை தந்து தன் இரசிகர்களை மகிழச்சிப்படுத்திய Black board international மீண்டும் தன்னை நிரூபிக்கும் என நம்புவோம்.

யாழில் இடம்பெற்ற மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

யாழில் இடம்பெற்ற மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை: துபாயிலிருந்து வந்த இலட்சங்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை: துபாயிலிருந்து வந்த இலட்சங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026