சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்காக மில்லியன் டொலர் கடன்
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
பெண்கள் தலைமையிலான வியாபாரங்களுக்குக் குறைந்தது 20 சதவீதப் பங்கை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பணிப்பாளர் ஷானன் கௌலின் தெரிவித்துள்ளார்.
மில்லியன் டொலர் கடன்
இந்தக் கடனில் 100 மில்லியன் டொலர் நிதி நிதி அமைப்பை வலுப்படுத்தவும், எஞ்சிய 100 மில்லியன் டொலர் முதலீட்டுக் கடன்களுக்காகவும் (இதில் 40 மில்லியன் டொலர் பசுமைக் கடன்களுக்காக) ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தலைமையிலான வியாபாரங்களுக்குக் குறைந்தது 20 சதவீதப் பங்கை வழங்கவும், குறுநிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபையை நிறுவுவதற்கான சட்ட சீர்திருத்தங்களுக்கும் இத்திட்டம் உதவும் என ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பையும், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 45 சதவீதத்தையும் வழங்கும் இத்துறை, பொருளாதார மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள இந்த நிதியுதவி வழிவகுக்கும் என இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பணிப்பாளர் ஷானன் கௌலின் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |