ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கில் பறந்த பறவைகள் - பார்ப்போரை சிலிர்க்க வைக்கும் காணொளி
கென்யாவில் ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான பிளெமிங்கோ பறவைகள் பறந்து செல்லும் வியப்பூட்டும் காணொளி தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கிழக்கு ஆபிரிக்க தேசம் கென்யா. இங்குள்ள போகோரியா ஏரி (Lake Bogoria National Reserve) உலக பிரசித்தி பெற்றது. அதற்கு காரணம் இங்கு வரும் பறவைகள் தான்.
குவியும் சுற்றுலா பயணிகள்
32 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இந்த நீர் பரப்பு ஏராளமான பறவைகளை ஈர்க்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கே பறவைகள் வந்து செல்கின்றன. இதனை காணவே இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் - ஒக்டோபர் மாதங்களில் இங்கே இலட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வருகின்றன. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பறவைகள் வரும் நேரத்தில் இவற்றை பார்வையிட மக்களும் ஆர்வத்துடன் இப்பகுதிக்கு செல்கின்றனர்.
பல்வேறு கண்டங்களில் இருந்து வரும் பறவைகள்
3,000,000 pink flamingos, Kenya.????
— ?o̴g̴ (@Yoda4ever) October 25, 2022
?:IG | olmalo pic.twitter.com/qDG9ZQUoTM
இந்தப் பகுதியில் வெப்ப நீரோட்டம் இருப்பதாலும், இப்பகுதியின் காலநிலை காரணமாகவும் இந்த பறவைகள் பல்வேறு கண்டங்களில் இருந்து பறந்து இங்கு வருகின்றன.
இந்நிலையில், தற்போது பரவி வரும் இந்த காணொளியில் போகோரியா ஏரியின் கரையில் இருந்து இலட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக பறந்து செல்கின்றன. இந்த காட்சி டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
