நாளை முதல் பூமிக்கு இரண்டு நிலவுகள்: விஞ்ஞானிகளின் சுவார்ஸ்ய தகவல்
இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறது என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
அதன்படி Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்ட சிறு கோளானது நாளை முதல் (29) நவம்பர் 25 வரை பூமிக்குச் சிறு நிலவாக (mini-moon) செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 பிடி5-ஐ என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியின் அருகே, சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வர இருக்கிறது. இது சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறையாகும்.
புவிஈர்ப்பு விசை
இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்பும். அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு சிறு நிலவாக செயல்பட்டு பூமியை சுற்றும் இந்த சிறு நிலவானது ஒரு முறை பூமியை சுற்றும் முன்னரே புவி ஈர்ப்பு விசையில் இருந்து விடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுக்குள் ஏற்படும் உறவை ஆய்வு செய்யவும், புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, கடந்த 2022 -ம் ஆண்டில் NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Newly-discovered #asteroid 2024 PT5 is about to undergo a "mini-moon event" when its geocentric energy becomes negative from September 29 - November 25.https://t.co/sAo1qSRu3J pic.twitter.com/pVYAmSbkCF
— Tony Dunn (@tony873004) September 10, 2024