விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
By Vanan
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பிலான நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை மறுசீரமைப்பு
இது தொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில், திறமையின்மை மற்றும் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவிகளில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.

சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இலக்குகளை அடைவதிலும், செயல்திறனை மேம்படுத்தவும் தவறிய சிலரது பதவிகள் மாற்றப்படும்" என்று கூறப்பட்டுளது.