அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துக்கள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் குறைந்தபட்ச வேக வரம்புகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதால் ஏற்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கிலோமீட்டர் என விதிக்கப்பட்டிருந்தாலும், குறைந்தபட்ச வேகம் இன்னும் விதிக்கப்படவில்லை என்று வாராந்திர அமைச்சரவை மாநாட்டில் அவர் கூறியுள்ளார்.
கலந்துரையாடல்
மேலும், மெதுவாக செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும்போது பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க குறைந்தபட்ச வேக வரம்பை நிர்ணயிப்பது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக துறைசார் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் போன்ற தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |