அமைச்சரவை அளித்த அனுமதி - உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டமூலத்தை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“தற்போது இலங்கையில் காணப்படுகின்ற ஒரேயொரு சுத்திகரிப்பு நிலையத்தில் நாள் ஒன்றில் 38 ஆயிரம் பெரல் கொள்ளளவே காணப்படுகின்றது.
இதன் கொள்ளளவை 45 ஆயிரம் பெரல்களாக அதிகரிக்கவும் ஒரு இலட்சம் கொள்ளளவை உடைய புதிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் தேவையான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதுடன், ஒக்டோபர் மாதமளவில் இதனை பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கென 600 பில்லியன் ரூபா செலவாகும் என கருதப்படுகின்றது. இதனை நோக்கினால் நாட்டில் மிகப்பெரிய திட்டமாக இதனை கருத முடியும். அதேபோன்று சர்வதேச கேள்விமனு கோரலின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது பிரதான திட்டமாகவும் இது கருதப்படும்.
முதலீடு செய்யவுள்ள கம்பனிக்கு தேவையான சட்ட வரையறைகளை வழங்குவதற்கென 1961 (28)ஆம் இலக்க பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டமூலத்தை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”