மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஆபத்தொன்றுமில்லை: அமைச்சர் திட்டவட்டம்
மன்னார் (Mannar) காற்றாலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முன்னைய ஆட்சியாளர்களினால் முன்பே செய்து முடிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
கல்வி அபிவிருத்திக்குழுமத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முன்பள்ளி கல்விக்கூடங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்று நேற்று (27) மன்னார் மாவட்ட மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனிய மணல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னாரின் கனிய மணல் அகழ்வு சம்மந்தாக இதற்கு முன்னால் கூட முதல்தடவையாக நான்தான் கருத்து தெரிவித்தேன்.
மன்னார் கிராமம் எதிர்காலத்தில் அத்துப்பட்டி கிராமமாக மாறிவிடும் என்று கனிய மணல் அகழ்வின் ஊடாக ஏற்படப்போகின்ற ஆபத்து தொடர்பில் தெரிவித்தேன்.
காற்றாலை மின் உற்பத்தி அமைப்பது தொடர்பிலான பிரச்சின ஒரு பூதகரமான பிரச்சினையாக மாறியுள்ளது என்பது உண்மை.
மின் உற்பத்தி
அது தொடர்பில் ஐனாதிபதிளினால் பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டது என்பதும் உண்மை மற்றும் அது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மை.
இருந்தும் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
முன்னைய ஆட்சியாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டு இன்று அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்ட தறுவாயில் தற்போது அனுமதி மறுக்கப்படுமாக இருந்தால் இந்த விரையங்களுக்கான கோடி மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தினை மீண்டும் அரசாங்கம் ஊடாக அந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிவரும்.
இதனால் இங்கிருக்கின்ற மக்களிடம் நாங்கள் வினையமாக கேட்டுக்கொள்கின்ற விடயம் என்ன என்றால் காற்றாலை ஊடாக மன்னாருக்கு பாதிப்பு வருமாக இருந்தால் மன்னார் மண்ணுக்கு பாதிப்பு வருமாக இருந்தால் அதற்கான அனுமதியினை நாங்கள் கொடுக்கப்போவதில்லை.
ஆய்வுகள்
அந்தவகையில் எல்லாவகையிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமாக எங்களுக்கு தெரிகின்றது அவ்வாறான பாதிப்பு இல்லை என்ற உண்மை தெரிகின்றது.
கடந்த காலத்தில் பல இடங்களில் சாவகச்சேரி மற்றும் புத்தளத்தினை எடுத்துக் கொண்டாலும் மீன்கள் எல்லாம் வரப்போவதில்லை என்றவர்கள் இன்று சென்று கேட்கின்ற போது அந்த இடத்தில்தான் அதிகளவான மீன்கள் வருகின்றனவாம் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று சொல்கின்றார்கள்.
காற்றாலை மின்னிலையம் அமைப்பது என்பது இன்று உலக நாட்டில் இருக்கின்ற முக்கியமான துறை, எங்களின் நிலத்திற்கும் நீரிற்கும் மற்றும் உயிரினங்களுக்கும் பாதிப்பு வராது என்கின்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் கடந்தகாலங்களில் செய்து முடிக்கப்பட்ட அந்த துறையான வேலையினை செய்து முடிப்பதற்கான நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
இது குறித்து உரிய அமைச்சர்கள் வந்து மீண்டும் பேச்சுவார்தை நடத்துவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
