அர்ச்சுனா எம்பி மூளை சரியில்லதாவர்: சர்ச்சைக்குள்ளான அமைச்சர் சந்திரசேகரின் கருத்து
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை (Ramanathan Archchuna) மூளை சரியில்லதாவர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
குறித்த விடத்தை நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் மத்தியில் என்ன கதைப்பது மற்றும் வெளியில் யாருடன் எப்படி கதைப்பது என்பது தொடர்பில் தெளிவில்லாமல் அவர் உலருகின்றார்.
யாழில் ஊடகத்துறையில் இருந்த பெண்களை இழிவு படுத்தியவர்தான் அவர், அத்தோடு அங்குள்ள மக்கள், இளைஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என அனைவரையும் இழிவுபடுத்திய நிலையில் தற்போது மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல் களம், தமிழர் பிரதேச அரசியல், நாட்டில் இடம்பெறும் கைதுகள் மற்றும் நடப்புசார் அரசியல் விடங்கள் தொடர்பில் அவர் பலதரப்பட்ட விடயங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
