“சட்டவிரோத காவல்துறை ஊரடங்கு ” அமைச்சர் ஹரினும் எதிர்ப்பு
Sri Lanka Police
Curfew
Harin Fernando
By Sumithiran
சட்டவிரோத காவல்துறை ஊரடங்கு
எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக “கோட்டகோகம” வளாகத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டவிரோத காவல்துறைஊரடங்குச் சட்டத்தை நான் வெறுக்கிறேன் மற்றும் வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரணிலுடன் இணைந்தது ஏன்
வரவிருக்கும் பேரழிவைத் தோற்கடிப்பதற்காக, யாரையும் காப்பாற்றுவதற்காக அல்லாமல் நான் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன்.
வரவிருக்கும் பேரழிவை தோற்கடிக்கும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தை வெல்வதில் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
