ஊரடங்குச்சட்டம் - சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு
காவல்துறையினருக்கு சட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை
அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த சட்டபூர்வமாக அதிகாரம் அளிக்கும் வெளிப்படையான சட்ட ஏற்பாடுகள் காவல்துறைக்கு எதுவும் இல்லை என்று கூறினார்.
மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் முயற்சி
மேலும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நாளை ஒன்று கூடுவதை தடுப்பதற்கான ஒரு சட்டவிரோத அறிவிப்பு இது என்றும் கூறினார்.
மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு பிரிவு, களனிப் பிரிவு, நுகேகொட பிரிவு, கல்கிசை பிரிவு, கொழும்பு (வடக்கு) பிரிவு, கொழும்பு (தெற்கு) பிரிவு மற்றும் கொழும்பு (மத்திய) பிரிவு உட்பட பல பிரதேசங்களுக்கு முன்னதாக காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
There's no law in Sri Lanka that provides for or allows imposition of anything called a "police curfew".
— Viran Corea (@ViranCorea) July 8, 2022
Any action to prohibit the freedom of movement and thereby the right to peaceful protest on such a non-existent basis is illegal and a denial of citizens' fundamental rights. pic.twitter.com/06ha7XSdoQ
