மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு
மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் 7 பிரதேசங்கள்
இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட்ட முழு அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி நாளை நடத்தப்படவுள்ள போராட்டங்கள் குறித்து அரசதரப்பு அச்சம் அடைந்துள்ளதால் கொழும்பில் அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அரச தலைவர் செயலகம், அலரிமாளிகை, காவல்துறை தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான படை துருப்புகள் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் பாதுகாப்பு எவ்வாறு பலப்படுத்தபபடாலும் நாளைய போராட்டத்தை வலுவாக மாற்றுவது என்ற திடசங்கற்பத்துடன் இன்று மாலை முதலே போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் எழுச்சி வலுத்து நிலையில் முக்கிய பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் - காணொளி |