அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டம் :அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சாமானிய மக்களின் நிலப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் கே.டி. லால் காந்தா(k.d. lalkantha) தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தவறு செய்கிறார்கள், நிலத்தை அபகரிக்கிறார்கள், பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கருத்து பொதுமக்களிடையே இருப்பதாக அமைச்சர் கூறினார்.
முதல் முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
பொது சொத்து மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக முதல் முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துடன்
பொதுமக்களின் செல்வத்தை கொள்ளையடித்து மக்களை ஒடுக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் அதே வேளையில், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் பொது மக்களின் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்கிறார்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. பொதுமக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துடன் உள்ளனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா
