பொறுப்பற்ற கருத்துக்கள் கூறும் வர்த்தகத்துறை அமைச்சர் - கவலை வெளியிடும் செஹான்
பொருட்களின் விலையை அதிகரித்து அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என நுண்கடன் மற்றும் மனைபொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ( Shehan Semasinghe)தெரிவித்தார்.
மேலும் சர்வதேச சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அதனை சீர்செய்வதற்காக தேசிய மட்டத்தில் சிறந்த பொறிமுறையினை செயற்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் கருத்துக்கள் கவலைக்குரியன எனவும் தெரிவித்தள்ளார்.
மேலும் பொறுப்பற்ற வகையில் குறிப்பிடும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் எத்தீர்மானங்களை முன்னெடுத்தாலும் அது பொதுஜன பெரமுனவின் அரசியல் இருப்பிற்கு எவ்வித பாதிப்பையும்.ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று பரவல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பெறும் என்று முன்கூட்டியதாக குறிப்பிட முடியாது. சவால்களுக்கு மத்தியில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் போது ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.