மீண்டும் நாமலுக்கு அமைச்சு பதவி - மேலும் பலர் இணைப்பு..! வெளியான தகவல்
Namal Rajapaksa
Sri Lanka Cabinet
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Kanna
நாமல் ராஜபக்ச உட்பட அமைச்சரவைக்கு மேலும் 12 பேர் நியமிக்கப்படுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மொட்டுக் கட்சி
இதன்படி, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேகுணவர்த்தன, ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம் அத்தாவுல்லா உட்பட்டவர்களின் பெயர்கள் இதுவரை பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை தோல்வியடைந்துள்ள நிலையிலேயே பொதுஜன பெரமுன கட்சியை முன்னிலைப்படுத்தி இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
