மற்றுமொரு அமைச்சருக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு விழாவை கைவிட்டு வெளியேறினார்
people
protest
Vasudeva Nanayakkara
By Sumithiran
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு(Vasudeva Nanayakkara) எஹலியகொட வலமுட்ட பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அப்பகுதியில் குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வந்த அமைச்சரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் அமைச்சரை நோக்கி கூச்சலிட்டதை அடுத்து அவரது பாதுகாவலர்கள் அமைச்சரை வெளியேற்ற முயன்றனர்.
பின்னர் எஹலியகொட காவல் நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததையடுத்து அமைச்சர் திறப்பு விழாவை கைவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியுடன் உணவருந்த சென்ற அமைச்சருக்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் அவர் உணவருந்தாமல் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி