இருவருக்கு மட்டுமே அனுமதி! வெளிவந்தது புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்
corona
sri lanka
people
By Shalini
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கருத்திற் கொண்டு இன்று (23) முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
குறித்த வழிகாட்டலில், அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்காக , வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு, இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து, புகையிரதம் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துக்களின் போது, இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும்.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்