துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு
2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று (01) ஆரம்பமாகவுள்ள புதுப்பிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும், துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள் ஆவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை
இதேவேளை, 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |