சாதாரண தர பரீட்சை வினாத்தாள் குறித்த குற்றச்சாட்டுகள்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்
கல்வி பொதுத்தர சாதாரண தர (GCE Ordinary Level Exam) விஞ்ஞானம் (Science) மற்றும் ஆங்கில (English) வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்தோடு, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன (Rohini Kumari Wijerathna) சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
வினாத்தாள் சிக்கல்கள்
குறித்த கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதிலளிக்கையில், வினாக்களில் சிக்கல்கள் பதிவாகியுள்ளதாகவும் அறிவியல் தாள் மற்றும் தாள் அமைப்பாளர்களின் பல்தேர்வு வினாக்களில் (MCQ) இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த ஆண்டு ஆங்கில வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ கவிரத்ன (Sanjeeva Kaviratne) சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு எந்த வித அநீதியும் ஏற்படாத வகையில் வழக்கமான மாதிரி தயாரித்த பிறகு மதிப்பெண் திட்டத்தை தயாரிக்கும் போது இந்த விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |